சுமம் ப்ரதி சுமம் சுமம்.. தினம் அனுதினம் தினம்

இளையராஜா எத்தனை பாட்டு தந்தாலும் கேட்டுக்கிட்டே இருக்கத்தான் தோணுது.rindu அப்படிக் கேட்கும் பாடல்களில், சில பாடல்களைத் தொடர்ந்து 3-5 நாட்கள் கேட்டாலும் எனக்கு சலிக்கவில்லை. அப்படி ஒரு பாடல் இங்கே.. இசைக்கு மொழியில்லை என்பதை நிரூபிக்கிறது.

1987-ல் 'மகரிஷி' என்ற தெலுங்கு படத்துக்காக இசைஞானி போட்ட பாட்டு. எஸ்.பி.பி-யின் குரலில் உள்ள ஜீவன் சொக்க வைக்குது.love எஸ்.ஜானகியின் குரலில் வரும் ஹம்மிங் அத்தனை அருமை. கண்ணை மூடிக் கேட்டுப் பாருங்களேன்.. (கண்ணைத் திறந்து வீடியோவைப் பார்த்தீங்கன்னா இந்த அருமையான பாட்டை அனுபவிக்க முடியாது..sedih)



இதே மெட்டில் தமிழ்ப் பாட்டு இருக்கான்னு நிச்சயமா தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். இந்தப் பாடல் தமிழில் வந்தால் எப்படி இருக்கும்-ன்னு ஒரு சின்ன முயற்சி..
sengihnampakgigi

படம்: மகரிஷி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
...

பெ: ஆ.. ஆ.. ஆஆஆ.. ஆஆ..
ஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
தனனானனானா.. தனனானனானா..

ஆ: தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
மலர் உடல் தழுவிடும் ஒரு தருணம்
வானெங்கிலும் நம் ஊர்வலம்
தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
...

பெ: ஹஹா.. ஆஆஆ ஆஆஆஹா..
ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆ.. ஆ..

ஆ: கண்களால் பேசினாய் ஆயிரம் சொல்லடி
தேன்மொழி கேட்கிறேன் வாய்மொழி சொல்லடி
கண்ணில் நெஞ்சில் எங்கும் உனது உருவம்
உன்னை எண்ணி எண்ணி உருகும் இதயம்
உனக்காக வாழும் ஒரு ஜீவன் இங்கே
உனை வந்து சேரும் திரு நாளும் எங்கே
உனக்காக வாழும் ஒரு ஜீவன் இங்கே
உனை வந்து சேரும் திரு நாளும் எங்கே
பாடும் இசையின்.. ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆ..
பாடும் இசையின் நாதம் நீயே
காற்றோடு கேளாய்.. எனை வந்து சேராய்

ஆ: தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
...

பெ: ஹா.. தார ரத்தார ரத்தாரா.. தார ரத்தார ரத்தாரா..
ஆ.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ.. ஆ.. ஹா..

ஆ: தேவதை மேனியோ பாற்கடல்தானடி
நாளும் நான் ஏங்கினேன் மூழ்கிடத்தானடி
இன்றே இங்கே உயிர் இணைய விருப்பம்
இன்னும் இன்னும் என்ன உனது தயக்கம்
இரு விழியின் ஓரம் இளைப்பாற வந்தேன்
இருதயத்தை இன்று இடம் மாற்றிக் கொண்டேன்
காதல் மழையில்..
ஆஆஆ ஆஆஆ ஆ..
காதல் மழையில் ஜீவன் நனைந்தேன்
தாலாட்ட வா.. தோள் சாய வா

ஆ: தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
மலர் உடல் தழுவிடும் ஒரு தருணம்
வானெங்கிலும் நம் ஊர்வலம்
தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
...

பி.கு: இது மொழி பெயர்க்கப்பட்டதில்லை. காரணம், எனக்கு தெலுங்கு தெரியாது..sengihnampakgigi

PIT - அக்டோபர் மாதப் போட்டிக்கான புகைப்படம் - விளம்பரங்கள்

எல்லாருக்கும் வணக்கம்..

இந்த மாசம் போட்டிக்கான அறிவிப்பைப் பார்த்ததுமே என்ன படம் எடுக்கலாம்-ன்னு யோசிச்சு, இதுதான்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா வழக்கம் போல, அதைக் கடைசி நாள் வரைக்கும் தள்ளிப்போட்டு, அவசர அவசரமா எடுத்தேன். ராத்திரியோட ராத்திரியா உக்கார்ந்து டச்-அப் பண்ணி, கடைசி நிமிடத்தில்தான் அனுப்ப முடிஞ்சுது. என்ன செய்ய? ஸ்கூல், காலேஜ்-ல படிக்கிற காலத்துல இருந்தே, கடைசி நாளில் அஸைன்மெண்ட் எழுதுறது, எக்ஸாமுக்கு முந்தின நாள் புத்தகத்தை எடுக்குறது, எக்ஸாமில் கடைசி 5 நிமிடத்தில் மாங்கு மாங்குன்னு கோழி கிறுக்கின மாதிரி எழுதுறதுன்னு.. எல்லாமே லேட் தான்.. sengihnampakgigi

இந்த மாசப் போட்டிக்கான என் படம் இதோ.. தயவு செய்து, படங்களின் மேல் கிளிக்கி, பெரிதாக்கிப் பாருங்க. மறக்காம உங்க கருத்துகளையும் தெரிவிங்க. முதல் படம் போட்டிக்கு, மற்றவை உங்கள் பார்வைக்கு.. senyum இந்த மாசம் போட்டியில் பங்கேற்கும் எல்லா படங்களையும் இங்கே பார்க்கலாம்.

என் வீட்டுத் தோட்டத்தில்..

எங்கள் வீட்டில் பெரிய தோட்டம் போடும் அளவுக்கு இடமில்லை. ஒரு சின்ன இடத்தில் மண் தொட்டிகள் வைத்து, செடிகள் வளர்க்கிறோம். சில ரோஜாச் செடிகள், ஒரு அடுக்கு மல்லிச் செடி, ஒரு 'பெயர் தெரியாத' பூச்செடி எல்லாம் இருக்கு. இன்னும் செடிகள் வளர்க்க ஆசை இருந்தும், இடப் பற்றாக்குறையால் முடியல. sedih தினமும் இல்லாட்டியும், அடிக்கடி ரோஜாப் பூக்கள் பூக்கும். எங்கள் தோட்டத்துப் பூக்கள் உங்கள் பார்வைக்கு.. (பூக்களைப் பெரிதாக்கிப் பார்க்க, படங்களின் மேல் க்ளிக்கவும்.)

காலைப் பனியில் ரோஜா புதுக்கவிதை பாடி ஆட..
பூ மேல பனித்துளி எல்லாம் இல்லை.. சும்மா ஒரு எஃபெக்டுக்காக தண்ணி தெளிச்சேன்.. sengihnampakgigiவா வா மஞ்சள் மலரே..அதே எஃபெக்ட் இங்கேயும்..இந்த வெள்ளை ரோஜாப் பூவைப் படம் எடுக்கக் கேமராவைக் கிட்டத்தட்ட தரையிலேயே வைக்கும் அளவுக்குப் போனதால, பார்க்காமலே படம் எடுக்க வேண்டியதா போச்சு.. gelakguling
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..
ரொம்ப நாளா பூக்காம இருந்த அடுக்கு மல்லிச் செடியும் மொட்டு விட்டுருக்கு.. senyum

ஆசிரியர்கள் ஏன் கடுப்பாகிறார்கள்?

நாம எல்லாருமே எதோ ஒரு நேரத்தில் ஆசிரியரைக் கடுப்பாக்கி, அதனால திட்டு, குட்டு, அடி, முட்டி போடுவதுன்னு பெருமைகளை அனுபவிச்சிருப்போம். நாம அந்த அளவுக்குத் திறமைசாலியாவா(?!) இருந்தோம்ன்னு இப்போ நினைச்சாக் கூட புல்லரிக்கும், சொரிஞ்சிக்கோங்க..

சமீபத்தில் வ்ந்த ஒரு மின்மடலில் யாரோ ஒரு பிள்ளையின் புலமை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.


அந்த ஆசிரியர் கடுப்பானாலும், நிச்சயம் இந்தப் பிள்ளையின் கற்பனைத் திறனை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்பார். senyum

PIT மெகா போட்டி 2008க்கான புகைப்படம் - கட்டமைப்பு


வெளியே போய் படமெடுக்க முடியவில்லை.. sedih வீட்டில் இருக்கும் நாற்காலியின் பகுதி இங்கே..

PIT - ஜூலை மாதப் போட்டிக்கான புகைப்படம் - இரவு நேரம்

காக்கும் கரங்கள்

ஒளிச் சுடர்

மின்சாரம் இல்லாத பல இரவுகளில் ஒரு இரவு.. முதல் படம் போட்டிக்கு, மற்றொன்று பார்வைக்கு..

சுப்ரமணியபுரம்


வேலை இல்லாம வெட்டியா ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கிற 5 பேரோட வாழ்க்கை எப்பிடி தடம் மாறிப் போகுதுங்கறதை முடிஞ்ச வரைக்கும் யதார்த்தத்தை மீறாம எடுத்திருக்காங்க. அறிமுக இயக்குனருக்கும் அவர் குழுவுக்கும் முதலில் பாராட்டுக்கள்!

அழகர், பரமன், காசி, டும்கா, இன்னொருத்தர் (பேரு மறந்து போச்சு) இவங்க அஞ்சு பேரும் ஊரைச் சுத்திக்கிட்டு வம்பு வளர்த்துக்கிட்டு, ஒரு லோக்கல் அரசியல்வாதிக்கு
ம் அவரோட தம்பிக்கும் எடுபிடி வேலைகள் செஞ்சிக்கிட்டு, அவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ‘சித்தன்’ சவுண்டு சர்வீஸ் கடையிலேயே பொழுதைக் கழிக்கிறாங்க. அந்த அரசியல்வாதியோட பொண்ணு துளசிக்கும் அழகருக்கும் கண்ணால பேசியே காதல்.

ஒரு கட்டத்தில, வேலைக்குப் போய் சம்பாதின்னு காதலி சொன்னதும், நம்ம அழகர் படிச்சு, கலெக்டர் ஆகப் போறாருன்னு நினைக்காதீங்க. அவர் முதலில் எடுத்துச் செய்வது ஒரு கொலை! தங்களுக்கு பல நேரங்களிலும் உதவி செஞ்ச அரசியல்வாதிக்கு ஒரு சிக்கல் வந்ததும், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்து, அவங்
க செய்யும் முதல் கொலை, அவங்க வாழ்க்கையையே புரட்டிப் போடுது. அழகரும், பரமனும் கூட்டாகச் செய்யும் அந்தக் கொலையின் விளைவாக ஜெயில் தண்டனை, அங்க கிடைக்கிற நட்பு, அந்த நட்புக்காக மேலும் கொலைன்னு அவங்களோட குற்றப் பட்டியல் நீளுது.

தங்களைக் கைவிட்ட அரசியல்வாதியையும், அவர் தம்பியையும் கொல்லத் துடிக்கிற அழகரும் பரமனும் தலைமறைவா அலைய, இதுக்கிடையில் துளசி-அழகர் காதலும் ஒரு பக்கமா வளர்ந்துட்டு இருக்கு. ஒரு நாள் இவங்க காதல் பொண்ணு வீட்டுக்குத் தெரிஞ்சதும், அதை அவங்க
எப்பிடி அணுகுறாங்க? எப்பிடி உபயோகிக்கிறாங்க? படத்தில் பார்த்துத் தெரிஞ்சிக்கோங்க. எனக்குக் கொஞ்சம் ‘பட்டியல்’ ஞாபகம் வந்துச்சு.

அழகர்-பரமனாக ஜெய்-இயக்குனர் M.சசிக்குமார். படம் முழுக்கவே இவங்கதான் இருந்தாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர் குறை வைக்கல.  ‘டும்கான்
’ கேரக்டர் சூப்பர். மதுரைத் தமிழ்-ல வெளுக்குறாரு. கஞ்சா கருப்புக்கு இனிமே காமெடியோடு சேர்ந்த குணச்சித்திர பாத்திரங்களும் கிடைக்கும். அறிமுக நாயகி ஸ்வாதிக்கு நல்ல குடும்பப் பாங்கான முகம். பார்த்ததுமே, மதுரைக்காரப் பொண்ணுன்னு சொல்லலாம். ஆனா, குரல் கொடுத்தவங்களை மாத்திருக்காலாம், மதுரைத் தமிழே வரலை. அதே மாதிரி, நாயகன் ஜெய் பேசும் போது ‘சென்னைத் தமிழ்’ வாசம்!

படத்தில் முக்கியமான அம்சங்கள் ஆர்ட் டைரக்ஷனும் இசையும். கதை பெரும்பாலும் 1980-ல நடக்கிறதால, அந்த காலத்தில் இருந்த ஹேர் ஸ்டைல், உடைகள், டவுன் பஸ், கருப்பு டெலிஃபோன், ஸ்கூட்டர், பழைய மாடல் அம்பாஸடர் கார், பழைய பத்து, இரண்டு, ஒரு ரூபாய் நோட்டுக்கள், இளையராஜா பாடல்கள், வானொலி அறிவிப்பு, சுவர் விளம்பரங்கள்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து கவனமா பண்ணிருக்காங்க. மதுரைப் பக்கம் அந்தக் காலத்து (இந்தக் காலத்திலும்?!) ஃபேஷனான காது வளையம், அன்னப் பறவைகள் டாலர் போட்ட ‘ஷார்ட்’ செயின் எல்லாத்தையும் கொண்டு வந்துட்டாங்க. ஜேம்ஸ் வசந்தன் இசையில் ‘கண்கள் இரண்டால்’ பாட்டு இன்னும் கொஞ்ச நாள் டிவி, எஃப்.எம் சானல்களில் போட்டுத் தேய்க்கப்படும். பின்னணி இசையில் பின்னியிருக்கார் ஜேம்ஸ்.

எல்லாம் சரி, படம் பார்த்துட்டு வந்து ஒரு நாளான பிறகு, படத்தைப் பத்திப் பதிவெழுத வந்தா, முதலில் நினைவுக்கு வருவது ரத்தம்! கத்திகளும், அரிவாள்களும் சர்வ சாதாரணமா உபயோகிக்கப்படும் போது, நம்ம மேல ரத்தம் தெரிச்சிடுமோன்னு பயப்படற அளவுக்கு இருக்கு! மொத்தப் படமும் பீடிப் புகைக்கு நடுவிலேயே எடுத்திருக்காங்க. இறுதிக் காட்சி அதிர வைப்பது நிஜம். அதை விட அதிர்ச்சி என்னன்னா, தியேட்டரில் ஆடியன்ஸ் ரியாக்ஷன்! இவ்வளவு வன்முறையையும், குரூரக் கொலைகளையும் பார்க்கும் போது, இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்-ல ஜெயிச்ச மாதிரி அப்பிடி ஒரு உற்சாகம், கைதட்டல், விசில் சத்தம் காதைக் கிழிச்சுது! இந்த மாதிரிப் படங்கள் கற்பனையா இருந்தாலும், உண்மைச் சம்பவங்களை மையமா வச்சு எடுத்திருந்தாலும், மனுசன் மனசுல இருக்கிற வன்மம், வெறி, மிருகத்தனம் எல்லாத்தையும் பளிச்சுன்னு காட்டுது. சமூகத்துல நடக்குற குற்றங்களைத் தான் அவங்க படமா எடுக்குறாங்களா? இல்லை இந்த மாதிரி படங்களைப் பார்த்துத்தான் சமூகம் குற்றங்களை தைரியமா செய்யுதா?

துப்பாக்கி எடுத்தவனுக்குத் துப்பாக்கியால சாவு, கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால சாவுன்னு நிரூபிக்க ‘நாயகன்’, ‘தளபதி’, ‘பட்டியல்’ வரிசையில் ‘சுப்ரமணியபுரம்’.

PIT - ஜூன் மாதப் போட்டிக்கான புகைப்படம் - அன்றாட வேலையில் உயிரினம்

ரொம்ப நாளா பத்திரமா, பூட்டி வச்சிருந்த கேமராவை வெளியே எடுத்தே ஆக வேண்டிய நிலை. அதுவும் போட்டியின் கடைசி நாளான இன்னைக்கு! jelir படம் எடுக்க வெளிய போகவும் முடியலை. sedih பால்கனி ரோஜாத் தொட்டியில் வாழும் மண்புழு, மொட்டைமாடி கைப்பிடிச்சுவரில் பயணித்த எறும்புகள், அது இதுன்னு சமாளிக்க வேண்டியதுதான். முதல் படம் போட்டிக்கு..

========================================

விவசாயி நண்பன்

***"சீக்கிரம் படம் புடிங்க, உள்ள போறேன்.."
========================================

நலம், நலமறிய ஆவல்!

***"என்னம்மா கண்ணு செளக்கியமா?"
========================================

ஏற்கனவே எடுத்து வச்சிருந்த கொஞ்சும் புறாக்களையும் சேர்த்துக்கிட்டாச்சு sengihnampakgigi

***"என் பின்னாடி சுத்துறதே இவனுக்கு வேலையாப் போச்சு.."
========================================

ஹும்.. இதுதான் 'ஜூன்' மாதப் போட்டிக்கான தலைப்புன்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா, 'மே' மாதப் போட்டிக்கு இந்தப் படத்தைப் போட்டிருக்க மாட்டேன்..

***ஷ்ஷ்.. கொஞ்ச நேரம் ஆடாம அசையாம உட்காரு.."
========================================

PIT- மே மாத போட்டிக்கான புகைப்படம்- ஜோடி

மக்களே..

இந்த மாச 'ஜோடி' புகைப்படப் போட்டிக்கு என் படங்கள் இங்கே. என் குழப்பம் இன்னும் தீர்ந்த பாடில்ல. நான் மட்டும் குழம்பினா எப்பிடி? நீங்களும் குழம்ப வேண்டாமா? 'ரெண்டு' மட்டும் இருந்தாத்தான் ஜோடியா? முதல் படத்தை 'ஜோடி'ன்னு ஒத்துக்கிட்டா எடுத்துக்கோங்க. 'குடும்பம்'ன்னு நினைச்சா சொல்லுங்க, அதை எடுத்துடறேன். ரெண்டாவது படத்தை எடுத்துக்கோங்க. குழப்பத்துக்கு மன்னிக்கவும்.


"எங்க கெமிஸ்ட்ரி எப்பிடி? ஜோடி நம்பர் 1க்கு போகலாம்னு இருக்கோம்.."

*ஜனவரி, 2002. திருமூர்த்தி மலையருவியில்..


"ஒண்ணா இருந்தா மட்டும் போதாது.. ஒத்தாசையாவும் இருக்கணும்."

*டிசம்பர், 2002. முக்கொம்பு அணை பூங்காவில்..


"அதோ.. அந்த மனுஷங்க சண்டை போடுறதப் பாரு.. நாமளே பரவாயில்ல.."

*டிசம்பர், 2002. முக்கொம்பு அணை பூங்காவில்..