1987-ல் 'மகரிஷி' என்ற தெலுங்கு படத்துக்காக இசைஞானி போட்ட பாட்டு. எஸ்.பி.பி-யின் குரலில் உள்ள ஜீவன் சொக்க வைக்குது.
இதே மெட்டில் தமிழ்ப் பாட்டு இருக்கான்னு நிச்சயமா தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். இந்தப் பாடல் தமிழில் வந்தால் எப்படி இருக்கும்-ன்னு ஒரு சின்ன முயற்சி..
படம்: மகரிஷி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
...
பெ: ஆ.. ஆ.. ஆஆஆ.. ஆஆ..
ஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆ..
ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆ..
தனனானனானா.. தனனானனானா..
ஆ: தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
மலர் உடல் தழுவிடும் ஒரு தருணம்
வானெங்கிலும் நம் ஊர்வலம்
தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
...
பெ: ஹஹா.. ஆஆஆ ஆஆஆஹா..
ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆ.. ஆ..
ஆ: கண்களால் பேசினாய் ஆயிரம் சொல்லடி
தேன்மொழி கேட்கிறேன் வாய்மொழி சொல்லடி
கண்ணில் நெஞ்சில் எங்கும் உனது உருவம்
உன்னை எண்ணி எண்ணி உருகும் இதயம்
உனக்காக வாழும் ஒரு ஜீவன் இங்கே
உனை வந்து சேரும் திரு நாளும் எங்கே
உனக்காக வாழும் ஒரு ஜீவன் இங்கே
உனை வந்து சேரும் திரு நாளும் எங்கே
பாடும் இசையின்.. ஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆ..
பாடும் இசையின் நாதம் நீயே
காற்றோடு கேளாய்.. எனை வந்து சேராய்
ஆ: தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
...
பெ: ஹா.. தார ரத்தார ரத்தாரா.. தார ரத்தார ரத்தாரா..
ஆ.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ.. ஆ.. ஹா..
ஆ: தேவதை மேனியோ பாற்கடல்தானடி
நாளும் நான் ஏங்கினேன் மூழ்கிடத்தானடி
இன்றே இங்கே உயிர் இணைய விருப்பம்
இன்னும் இன்னும் என்ன உனது தயக்கம்
இரு விழியின் ஓரம் இளைப்பாற வந்தேன்
இருதயத்தை இன்று இடம் மாற்றிக் கொண்டேன்
காதல் மழையில்..
ஆஆஆ ஆஆஆ ஆ..
காதல் மழையில் ஜீவன் நனைந்தேன்
தாலாட்ட வா.. தோள் சாய வா
ஆ: தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
மலர் உடல் தழுவிடும் ஒரு தருணம்
வானெங்கிலும் நம் ஊர்வலம்
தினம் அனுதினம் தினம்
தவித்திடும் மனம் மனம்
...
பி.கு: இது மொழி பெயர்க்கப்பட்டதில்லை. காரணம், எனக்கு தெலுங்கு தெரியாது..


0 தூது வந்திருக்கு:
நிலாவுக்குத் தூது அனுப்புங்க..