'தல' புராணம்

முதல் முறை Local cable-ல்  'அமராவதி' படம் போட்டாங்க. அப்போ அந்தப் படம் பத்தி எதுவும் தெரியாது, பாடல்கள் கூடக் கேட்டதில்லை. எந்த ideaவும் இல்லாமல் படம் பார்த்தேன். படம் சுமார்ன்னாலும், அஜித்தைப் பார்த்ததும் பிடிச்சிருச்சு.love வெறும் love story தானேன்னு சொன்னாலும், அழகு என்பதைத் தாண்டி, எதோ ஒரு sincerity தெரியும் அந்த முகத்தில்.rindu பாடல் காட்சிகளில் (குறிப்பாகப் புத்தம் புது மலரே..) எஸ்.பி.பியின் பரவசக் குரலுக்கு ஏத்த மாதிரி, தானே நிஜத்தில் பாடுவது போல வாயசைப்பும் பாவனையும் இருக்கும். இது இப்ப வரைக்கும் பொருந்தும். அப்புறம் என்ன? School, college காலங்களில் முழுசா சந்திரமுகியாவே மாறி இருந்தேன். sengihnampakgigi


வீட்டுப் பக்கத்துக் கடைக்கார அக்கா, என்னென்ன பத்திரிக்கையில் அஜித் படம் / பேட்டி / செய்தித் துணுக்கு வந்தாலும் எனக்காக எடுத்து வைப்பாங்க. இது தவிர நாளிதழ் விளம்பரங்கள், விகடன் குமுதம் எல்லாம் விடவே மாட்டேன். 'அஜித்'ன்னு print பண்ணிய சின்ன paper கூட பத்திரமா வெட்டி எடுத்து வைச்சிருந்தேன் Platform ஓரக் கடைகளில் எல்லாம் சேகரிச்சு எக்கச்சக்க posters இப்பவும் ஊர்ல இருக்கு. எனக்குப் posters பரிசளித்த நண்பர்களை இப்பவும் மகிழ்ச்சியா நினைச்சிக்கிறேன்.senyum

TV-ல் போட்ட அஜித் படங்கள், பாடல்கள், பேட்டிகள்ன்னு ஆரம்ப காலத்தில் VCR-லயும், பிறகு Computer-லயும் record பண்ணியதும் ஏகத்துக்கும் இருக்கு. எத்தனை முறை பார்த்தாலும் அந்த expressions, அழகு, style சலிக்காது.rindulove

மே-1 அஜித் பிறந்த நாளுக்கு நான் புது dress போட்டு, என் cousin உடன் cake வெட்டிக் கொண்டாடுவேன்.sengihnampakgigi உடனே, "உன்னைப் பெத்த அப்பா பிறந்தநாளை இப்படிக் கொண்டாடிருக்கியா?"ன்னு கத்தியத் தூக்கிட்டு யாரும் வராதீங்க,shame on youஅதையும் செஞ்சிருக்கேன். அப்பா என்பவர் எனக்கு எல்லாமானவர், வேற level. அவரை வேற எவரோடும் ஒப்பிடுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

அஜித்தின் சில படங்கள் சரியாக ஓடாத போது, நம்மளைக் கடுப்பேத்தறதுக்கே சிலர் உற்சாகமா வருவாங்க. அவங்க வாயை அடைக்கவே 'வாலி' வந்துச்சு. மே-1, 1999. வீட்டில் புது dress, cake வெட்டிக் கொண்டாடிட்டு, அபிராமி complex'ல முதல் நாள் evening show-க்கு black ticket வாங்கிப் போயாச்சு.dancing கடைசி row-ல முதல் seat.rindu படத்தில் அஜித் performance செம class. எனக்கு சந்தோஷம் தாங்கலை.sengihnampakgigi படம் முடிஞ்சு முதல் ஆளா வெளியில் வந்ததும், படத்தின் Assistant / Associate Director படம் பத்திக் கருத்து கேட்டார். "செமயா இருக்கு, அஜித் performance super, கட்டாயம் award கிடைக்கும்"ன்னு உற்சாகமாச் சொல்லிட்டு, மிதந்து வெளியே வந்தேன்.dancing Night show ticketக்கு ரசிகர்கள் அடிதடி நடந்துட்டு இருந்துச்சு. அப்போ ஒரு வெள்ளை car கூட்டத்தைக் கடந்து எனக்கு முன்னால் போச்சு.rindu நான் இருந்த மிதப்புல எதையும் கவனிக்கல. அந்தக் car-ல் அஜித் போவதா எல்லாரும் கத்தினாங்க.  நான் பார்க்கிறதுக்குள்ள car போயிருச்சு. sedih

'வாலி'க்கு அப்புறம் அஜித் மாறுபட்ட பல characters-ல நடிச்சு, அவருடைய image கிடுகிடுன்னு வளர்ந்துருச்சு. தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்கள் அஜித்தைத் 'தல'யாக மாத்திருச்சு. இந்தத் 'தல'யை ஏற்றுக் கொண்டுவிட்டாலும், 'ஆசை', 'காதல் மன்னன்', 'வாலி', 'அமர்க்களம்', 'முகவரி' மாதிரி படங்கள்'ல வந்த 'அஜித்'தை இப்போ ரொம்பவே miss பண்றேன். sedih

College-ல் ஒரு முதல் நாள் class-ல், 'உங்களுக்கு விருப்பமானதை வரையலாம்'ன்னு ma'am சொன்னப்ப, என் notebook cover-ல இருந்த அஜித் photoவைப் பார்த்துதான் வரைஞ்சேன்.sengihnampakgigi

என் தீவிர அஜித் ரசனை பார்த்து, தோழிகள் சிலர், "உனக்கு வர hubby பயங்கர விஜய் ரசிகரா இருக்கணும், உங்க வீட்டில் எப்பவும் ரணகளமா இருக்கும்"ன்னு விளையாட்டா சாபம் கொடுத்தாங்க. நல்ல வேளையா இவர் ரஜினி ரசிகர். இந்த விஷயத்தில் மட்டும் நாங்க சண்டை போடுறதில்லை.gelakguling

ஆரம்ப காலப் பேட்டிகளில், அஜித் வெளிப்படையாகப் பேசுவதைத் திமிராகப் பேசுவதாக ஒரு image உருவாக்கியிருந்தாங்க. அவருடைய honesty, வெளிப்படையான பேச்சு புதுசாக இருந்திருக்கணும். அதைப் புரிஞ்சிக்கிட்டதும் அவரைப் பற்றிய செய்திகளில் பெரிய மாற்றம் உண்டாகிருச்சு. தனி மனிதராக அவர் குணங்களும், அவரைப் பத்தி media-வில் பலர் சொல்லும் விசயங்களும் நிறைய பேருக்கு அஜித் மேல் ஒரு மரியாதையை உண்டாக்கிருக்கு.senyum

பல வருஷங்கள் கழிச்சு, Facebook-ல் சந்திக்கும் நண்பர்கள் நிறைய பேர் என் கிட்ட கேட்குறது "நீ இன்னும் அஜித் ரசிகைதானா? மாறவே இல்லையா?" அவங்களுக்கெல்லாம் என் பதில் "மாற வேண்டிய அவசியத்தை அஜித் என்ற நடிகரோ மனிதரோ எனக்கு உண்டாக்கவே இல்லை".senyum