வீட்டுப் பக்கத்துக் கடைக்கார அக்கா, என்னென்ன பத்திரிக்கையில் அஜித் படம் / பேட்டி / செய்தித் துணுக்கு வந்தாலும் எனக்காக எடுத்து வைப்பாங்க. இது தவிர நாளிதழ் விளம்பரங்கள், விகடன் குமுதம் எல்லாம் விடவே மாட்டேன். 'அஜித்'ன்னு print பண்ணிய சின்ன paper கூட பத்திரமா வெட்டி எடுத்து வைச்சிருந்தேன் Platform ஓரக் கடைகளில் எல்லாம் சேகரிச்சு எக்கச்சக்க posters இப்பவும் ஊர்ல இருக்கு. எனக்குப் posters பரிசளித்த நண்பர்களை இப்பவும் மகிழ்ச்சியா நினைச்சிக்கிறேன்.
TV-ல் போட்ட அஜித் படங்கள், பாடல்கள், பேட்டிகள்ன்னு ஆரம்ப காலத்தில் VCR-லயும், பிறகு Computer-லயும் record பண்ணியதும் ஏகத்துக்கும் இருக்கு. எத்தனை முறை பார்த்தாலும் அந்த expressions, அழகு, style சலிக்காது.
மே-1 அஜித் பிறந்த நாளுக்கு நான் புது dress போட்டு, என் cousin உடன் cake வெட்டிக் கொண்டாடுவேன்.
அஜித்தின் சில படங்கள் சரியாக ஓடாத போது, நம்மளைக் கடுப்பேத்தறதுக்கே சிலர் உற்சாகமா வருவாங்க.
'வாலி'க்கு அப்புறம் அஜித் மாறுபட்ட பல characters-ல நடிச்சு, அவருடைய image கிடுகிடுன்னு வளர்ந்துருச்சு. தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்கள் அஜித்தைத் 'தல'யாக மாத்திருச்சு. இந்தத் 'தல'யை ஏற்றுக் கொண்டுவிட்டாலும், 'ஆசை', 'காதல் மன்னன்', 'வாலி', 'அமர்க்களம்', 'முகவரி' மாதிரி படங்கள்'ல வந்த 'அஜித்'தை இப்போ ரொம்பவே miss பண்றேன்.
College-ல் ஒரு முதல் நாள் class-ல், 'உங்களுக்கு விருப்பமானதை வரையலாம்'ன்னு ma'am சொன்னப்ப, என் notebook cover-ல இருந்த அஜித் photoவைப் பார்த்துதான் வரைஞ்சேன்.
ஆரம்ப காலப் பேட்டிகளில், அஜித் வெளிப்படையாகப் பேசுவதைத் திமிராகப் பேசுவதாக ஒரு image உருவாக்கியிருந்தாங்க. அவருடைய honesty, வெளிப்படையான பேச்சு புதுசாக இருந்திருக்கணும். அதைப் புரிஞ்சிக்கிட்டதும் அவரைப் பற்றிய செய்திகளில் பெரிய மாற்றம் உண்டாகிருச்சு. தனி மனிதராக அவர் குணங்களும், அவரைப் பத்தி media-வில் பலர் சொல்லும் விசயங்களும் நிறைய பேருக்கு அஜித் மேல் ஒரு மரியாதையை உண்டாக்கிருக்கு.
பல வருஷங்கள் கழிச்சு, Facebook-ல் சந்திக்கும் நண்பர்கள் நிறைய பேர் என் கிட்ட கேட்குறது "நீ இன்னும் அஜித் ரசிகைதானா? மாறவே இல்லையா?" அவங்களுக்கெல்லாம் என் பதில் "மாற வேண்டிய அவசியத்தை அஜித் என்ற நடிகரோ மனிதரோ எனக்கு உண்டாக்கவே இல்லை".






