இந்த மாசம் போட்டிக்கான அறிவிப்பைப் பார்த்ததுமே என்ன படம் எடுக்கலாம்-ன்னு யோசிச்சு, இதுதான்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா வழக்கம் போல, அதைக் கடைசி நாள் வரைக்கும் தள்ளிப்போட்டு, அவசர அவசரமா எடுத்தேன். ராத்திரியோட ராத்திரியா உக்கார்ந்து டச்-அப் பண்ணி, கடைசி நிமிடத்தில்தான் அனுப்ப முடிஞ்சுது. என்ன செய்ய? ஸ்கூல், காலேஜ்-ல படிக்கிற காலத்துல இருந்தே, கடைசி நாளில் அஸைன்மெண்ட் எழுதுறது, எக்ஸாமுக்கு முந்தின நாள் புத்தகத்தை எடுக்குறது, எக்ஸாமில் கடைசி 5 நிமிடத்தில் மாங்கு மாங்குன்னு கோழி கிறுக்கின மாதிரி எழுதுறதுன்னு.. எல்லாமே லேட் தான்..
இந்த மாசப் போட்டிக்கான என் படம் இதோ.. தயவு செய்து, படங்களின் மேல் கிளிக்கி, பெரிதாக்கிப் பாருங்க. மறக்காம உங்க கருத்துகளையும் தெரிவிங்க. முதல் படம் போட்டிக்கு, மற்றவை உங்கள் பார்வைக்கு..






இந்த மாசம் போட்டியில் பங்கேற்கும் எல்லா படங்களையும் இங்கே பார்க்கலாம்.








