Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

நிலவொளியில் நனைவோமா?

எங்கள் வீட்டு மொட்டை மாடியில்.. நிலவொளியில் நனைந்தபோது எடுத்த படங்கள்..









என் வீட்டுத் தோட்டத்தில்.. II


இந்த ஆண்டின் முதல் மொட்டுகள்..



இந்த மொட்டு, மாலையில் மலரக் காத்திருந்தது.. படமெடுக்க நானும் காத்திருந்தேன்..



வாரத்தின் ஏழு நாட்களும் பூக்க வேண்டிய ரோஜா இது. வருடத்தில் ஏழு நாட்களே பூக்கிறது..



பூப்பூத்ததை யார் பார்த்தது? காதல் கூட பூவைப் போன்றது.. senyum





பொக்கிஷம்.. senyum









வெட்கத்தில் சிவந்ததோ?

PIT - அக்டோபர் மாதப் போட்டிக்கான புகைப்படம் - விளம்பரங்கள்

எல்லாருக்கும் வணக்கம்..

இந்த மாசம் போட்டிக்கான அறிவிப்பைப் பார்த்ததுமே என்ன படம் எடுக்கலாம்-ன்னு யோசிச்சு, இதுதான்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா வழக்கம் போல, அதைக் கடைசி நாள் வரைக்கும் தள்ளிப்போட்டு, அவசர அவசரமா எடுத்தேன். ராத்திரியோட ராத்திரியா உக்கார்ந்து டச்-அப் பண்ணி, கடைசி நிமிடத்தில்தான் அனுப்ப முடிஞ்சுது. என்ன செய்ய? ஸ்கூல், காலேஜ்-ல படிக்கிற காலத்துல இருந்தே, கடைசி நாளில் அஸைன்மெண்ட் எழுதுறது, எக்ஸாமுக்கு முந்தின நாள் புத்தகத்தை எடுக்குறது, எக்ஸாமில் கடைசி 5 நிமிடத்தில் மாங்கு மாங்குன்னு கோழி கிறுக்கின மாதிரி எழுதுறதுன்னு.. எல்லாமே லேட் தான்.. sengihnampakgigi

இந்த மாசப் போட்டிக்கான என் படம் இதோ.. தயவு செய்து, படங்களின் மேல் கிளிக்கி, பெரிதாக்கிப் பாருங்க. மறக்காம உங்க கருத்துகளையும் தெரிவிங்க. முதல் படம் போட்டிக்கு, மற்றவை உங்கள் பார்வைக்கு.. senyum இந்த மாசம் போட்டியில் பங்கேற்கும் எல்லா படங்களையும் இங்கே பார்க்கலாம்.

என் வீட்டுத் தோட்டத்தில்..

எங்கள் வீட்டில் பெரிய தோட்டம் போடும் அளவுக்கு இடமில்லை. ஒரு சின்ன இடத்தில் மண் தொட்டிகள் வைத்து, செடிகள் வளர்க்கிறோம். சில ரோஜாச் செடிகள், ஒரு அடுக்கு மல்லிச் செடி, ஒரு 'பெயர் தெரியாத' பூச்செடி எல்லாம் இருக்கு. இன்னும் செடிகள் வளர்க்க ஆசை இருந்தும், இடப் பற்றாக்குறையால் முடியல. sedih தினமும் இல்லாட்டியும், அடிக்கடி ரோஜாப் பூக்கள் பூக்கும். எங்கள் தோட்டத்துப் பூக்கள் உங்கள் பார்வைக்கு.. (பூக்களைப் பெரிதாக்கிப் பார்க்க, படங்களின் மேல் க்ளிக்கவும்.)

காலைப் பனியில் ரோஜா புதுக்கவிதை பாடி ஆட..
பூ மேல பனித்துளி எல்லாம் இல்லை.. சும்மா ஒரு எஃபெக்டுக்காக தண்ணி தெளிச்சேன்.. sengihnampakgigiவா வா மஞ்சள் மலரே..அதே எஃபெக்ட் இங்கேயும்..இந்த வெள்ளை ரோஜாப் பூவைப் படம் எடுக்கக் கேமராவைக் கிட்டத்தட்ட தரையிலேயே வைக்கும் அளவுக்குப் போனதால, பார்க்காமலே படம் எடுக்க வேண்டியதா போச்சு.. gelakguling
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..
ரொம்ப நாளா பூக்காம இருந்த அடுக்கு மல்லிச் செடியும் மொட்டு விட்டுருக்கு.. senyum

PIT மெகா போட்டி 2008க்கான புகைப்படம் - கட்டமைப்பு


வெளியே போய் படமெடுக்க முடியவில்லை.. sedih வீட்டில் இருக்கும் நாற்காலியின் பகுதி இங்கே..

PIT - ஜூலை மாதப் போட்டிக்கான புகைப்படம் - இரவு நேரம்

காக்கும் கரங்கள்

ஒளிச் சுடர்

மின்சாரம் இல்லாத பல இரவுகளில் ஒரு இரவு.. முதல் படம் போட்டிக்கு, மற்றொன்று பார்வைக்கு..

PIT - ஜூன் மாதப் போட்டிக்கான புகைப்படம் - அன்றாட வேலையில் உயிரினம்

ரொம்ப நாளா பத்திரமா, பூட்டி வச்சிருந்த கேமராவை வெளியே எடுத்தே ஆக வேண்டிய நிலை. அதுவும் போட்டியின் கடைசி நாளான இன்னைக்கு! jelir படம் எடுக்க வெளிய போகவும் முடியலை. sedih பால்கனி ரோஜாத் தொட்டியில் வாழும் மண்புழு, மொட்டைமாடி கைப்பிடிச்சுவரில் பயணித்த எறும்புகள், அது இதுன்னு சமாளிக்க வேண்டியதுதான். முதல் படம் போட்டிக்கு..

========================================

விவசாயி நண்பன்

***"சீக்கிரம் படம் புடிங்க, உள்ள போறேன்.."
========================================

நலம், நலமறிய ஆவல்!

***"என்னம்மா கண்ணு செளக்கியமா?"
========================================

ஏற்கனவே எடுத்து வச்சிருந்த கொஞ்சும் புறாக்களையும் சேர்த்துக்கிட்டாச்சு sengihnampakgigi

***"என் பின்னாடி சுத்துறதே இவனுக்கு வேலையாப் போச்சு.."
========================================

ஹும்.. இதுதான் 'ஜூன்' மாதப் போட்டிக்கான தலைப்புன்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா, 'மே' மாதப் போட்டிக்கு இந்தப் படத்தைப் போட்டிருக்க மாட்டேன்..

***ஷ்ஷ்.. கொஞ்ச நேரம் ஆடாம அசையாம உட்காரு.."
========================================