PIT- மே மாத போட்டிக்கான புகைப்படம்- ஜோடி

மக்களே..

இந்த மாச 'ஜோடி' புகைப்படப் போட்டிக்கு என் படங்கள் இங்கே. என் குழப்பம் இன்னும் தீர்ந்த பாடில்ல. நான் மட்டும் குழம்பினா எப்பிடி? நீங்களும் குழம்ப வேண்டாமா? 'ரெண்டு' மட்டும் இருந்தாத்தான் ஜோடியா? முதல் படத்தை 'ஜோடி'ன்னு ஒத்துக்கிட்டா எடுத்துக்கோங்க. 'குடும்பம்'ன்னு நினைச்சா சொல்லுங்க, அதை எடுத்துடறேன். ரெண்டாவது படத்தை எடுத்துக்கோங்க. குழப்பத்துக்கு மன்னிக்கவும்.


"எங்க கெமிஸ்ட்ரி எப்பிடி? ஜோடி நம்பர் 1க்கு போகலாம்னு இருக்கோம்.."

*ஜனவரி, 2002. திருமூர்த்தி மலையருவியில்..


"ஒண்ணா இருந்தா மட்டும் போதாது.. ஒத்தாசையாவும் இருக்கணும்."

*டிசம்பர், 2002. முக்கொம்பு அணை பூங்காவில்..


"அதோ.. அந்த மனுஷங்க சண்டை போடுறதப் பாரு.. நாமளே பரவாயில்ல.."

*டிசம்பர், 2002. முக்கொம்பு அணை பூங்காவில்..

13 தூது வந்திருக்கு:

CVR said...

உங்க பின்னூட்டத்துக்கு பிட்டுல பதில் போட்டாச்சு!!
குழப்பம் இப்போவாவது தீர்ந்ததா?? ;)

நிலாக்காலம் said...

//CVR said...
உங்க பின்னூட்டத்துக்கு பிட்டுல பதில் போட்டாச்சு!!
குழப்பம் இப்போவாவது தீர்ந்ததா?? ;)//

இப்பிடி சட்டுபுட்டுன்னு தீர்ந்துச்சுன்னா அப்புறம் குழப்பத்துக்கு என்ன மதிப்பு?:-O போட்டி முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கே.. நானும் குழம்பி, சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் எல்லாரையும் குழப்பினாத்தானே ஒரு மரியாதை?! நடுவர்கள் மட்டும்தான் குழம்பாம தீர்ப்பு சொல்லுவாங்கோ. அதனால, இதை நடுவர்கள் முடிவுக்கே விட்டுடறேன். குழப்பமா இருந்தாலும், எனக்கு ரொம்ப பிடிச்ச படத்தையே முதலாவதா போட்டிருக்கேன் :P

உங்கள் வருகைக்கு நன்றி :-)

. said...

Moneky Photos super....

நிலாக்காலம் said...

நன்றி Startmusik. :-)

SurveySan said...

2nd pic juper.

நிலாக்காலம் said...

//SurveySan said...
2nd pic juper.//

நன்றிங்க.. :-)

ரசிகன் said...

ஹா..ஹா..:)))))

போட்டோ மட்டும்ல்ல.. அதுக்கு கொடுத்த கமெண்ட்டும் நல்லாயிருக்கு:)

(ஆமா இதை எடுக்க அவங்க கிட்ட பர்மிஷன் வாங்கினிங்களா? மத்தவங்க பிரைவஸில தலையிடக்கூடாதுல்ல:P)

நிலாக்காலம் said...

நன்றிங்க.. நான் படம் எடுக்கும்போது அவங்க பார்த்துட்டுதான் இருந்தாங்க. ஆனா, தாக்குதல் நடத்தும் மூடில் அவங்க இல்லாததால் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கலை. நான் தப்பிச்சேன். :P

KARTHIK said...

பாட்டும் படமும் அருமை

நிலாக்காலம் said...

நன்றிங்க கார்த்திக். :-)

ராஜ நடராஜன் said...

இந்த மாதப் போட்டிக்கு குரங்கு என்றே நாட்டாமை தலைப்பு வைத்திருக்கலாம்.நிறைய நண்பர்களின் படம் இந்த மாதப் போட்டியில்.

(தட்டச்சு செய்யும்போது நாட்டாமை வார்த்தை போட்டிக்கு அடுத்து வந்தது.பதம் மாறுவதால் மாற்றியுள்ளேன்)

நிலாக்காலம் said...

ஹ ஹாஹா.. நல்ல வேளை, சொற்களை இடம் மாற்றினீர்கள்.. :))

ராஜ நடராஜன் said...

மீண்டும் ஒரு முறை உங்கள் பதிவுக்கு வருகை.பிளிக்கர் மற்றும் பிட் தவீர இதர பக்கங்களில் பின்னூட்டம் இடவில்லை.மற்றபடி இரண்டு நாட்களுக்கு முந்தி 1 நம்பரில் துவங்கி உங்கள் பதிவோடு முடிந்து மீண்டும் 70 பதில் துவங்கி உங்கள் பக்கம் வந்தவுடன் எல்லோருக்கும் பின்னூட்டமிட்ட நிறைவுடன் விடைபெறுகிறேன்.வணக்கம்.